மானாமதுரை கோயில்களில் கந்த சஷ்டி விழா துவக்கம்
மானாமதுரை: மானாமதுரை புது பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள வழிவிடு முருகன் கோயில் மற்றும் ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் உள்ள முருகன் சன்னதி, அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் உள்ள முருகன் சன்னதி ஆகிய இடங்களில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு சுவாமிகளுக்கு நேற்று அதிகாலை பால், பன்னீர், சந்தனம், குங்குமம், தயிர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் திருமஞ்சனம் செய்யப்பட்டு அபிஷேக, ஆராதனை நடந்தது.சுவாமிகள் அலங்காரத்துடன் சஷ்டி மண்டபத்திற்கு எழுந்தருளினர்.இதனைத் தொடர்ந்து சிவாச்சாரியார்களால் ஹோமங்கள் வளர்க்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின்னர் பக்தர்கள் கைகளில் காப்பு கட்டி விரதத்தை துவக்கினர்.