காரைக்குடி சுபஸ்ரீநகரில் ரோடு வசதியின்றி அவதி
காரைக்குடி: காரைக்குடி மாநகராட்சி 33 வது வார்டு சுபஸ்ரீ நகரில் தார் ரோடு வசதியில்லை. மழை காலங்களில் தேங்கும் கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் தொற்றினை ஏற்படுத்துகிறது. ரோட்டில் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. செஞ்சை பள்ளி வாசலை இணைக்கும் விதத்தில் இந்த ரோடு இருந்தும், தார் ரோடு போடப்படாததால், வாகனங்கள் செல்ல முடியாமல் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.