உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  கீழடி 11ம் கட்ட அகழாய்வு 2026 ஜனவரியில் தொடக்கம்

 கீழடி 11ம் கட்ட அகழாய்வு 2026 ஜனவரியில் தொடக்கம்

கீழடி: கீழடியில் அடுத்தாண்டு 11ம் கட்ட அகழாய்வு தொடங்க தொல்லியல் துறை திட்டமிட்டுள்ளனர். கீழடியில் 2015ல் மத்திய தொல்லியல் துறை சார்பில் நதிக்கரை நாக ரீகத்தை கண்டறியும் அகழாய்வுகள் தொடங்கின. மூன்று கட்ட அகழாய்விற்கு பின் தமிழக தொல்லியல் துறை அகழாய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரியில் தொடங்கி செப்டம்பர் வரை அகழாய்வு நடைபெறும். அதன்பின் அகழாய்வில் கண்டறியப்பட்ட பொருட்கள் குறித்த ஆவணங்கள் தயாரித்து மத்திய அரசின் தொல்லியல் துறையிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும். மத்திய அரசின் காபா அமைப்பு அடுத்த கட்ட அகழாய்விற்கு அனுமதி வழங்கும். பத்தாம் கட்ட அகழாய்வு 2024ல் லோக்சபா தேர்தல் காரணமாக ஜனவரிக்கு பதிலாக ஜூன் 18 கீழடியில் ஒன்றரை ஏக்கர் நிலத்தில் தொடங்கப் பட்டது. ஜூனில் பணிகள் தொடங்கியதால் 2025 மார்ச் வரை பணிகள் நடைபெறும் என தொல்லியல் துறையினர் தெரிவித்து இருந்தனர். 2025ல் 11ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெறவே இல்லை. 10ம்கட்ட அகழாய்வில் கிடைத்த பொருட்கள், தோண்டப்பட்ட குழிகள் உள்ளிட்டவைகள் குறித்த அறிக்கை மத்திய அரசின் காபா அமைப்பிடம் சமர்ப்பிக்கப்பட்டு விட்டன. எனவே ஜனவரியில் 11ம் கட்ட அகழாய்வு தொடங்கி செப்டம்பர் வரை நடைபெற வாய்ப்பு உள்ளது. திறந்த வெளி அருங்காட்சியகமும் ஜனவரி யில் திறக்கப்பட்டு விடு வதால் மீண்டும் அகழாய்வு பணி தீவிர மாக நடைபெறும் என தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்