உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  யோக விநாயகர் கோயிலில் டிச.1ல் கும்பாபிஷேக விழா

 யோக விநாயகர் கோயிலில் டிச.1ல் கும்பாபிஷேக விழா

மானாமதுரை, நவ.22- மானாமதுரை காந்தி சிலை முன்புறமுள்ள பூமி வரத யோக விநாயகர் கோயிலில் கடந்த சில மாதங்களாக கும்பாபிஷேகத்திற்காக திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. வருகிற டிச.1ம் தேதி காலை 9:35 மணியிலிருந்து 10:29 மணிக்குள் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. நவ.30ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 3:30 மணிக்கு கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை ஆரம்பமாகி விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, கும்ப அலங்காரம், யாக சாலை பிரவேசம், அஷ்ட பந்தன மருந்து சாத்துதல் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற உள்ளன. ஏற்பாடுகளை பூஜாரி ராஜேந்திரன், ஸ்தபதி பாண்டி மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை