உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  கும்பாபிஷேக விழா

 கும்பாபிஷேக விழா

காரைக்குடி: காரைக்குடியில் காளவாய் பொட்டல் சந்தன முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. நவ. 27ம் தேதி அணுக்ஞை விக்னேஸ்வரர் பூஜையுடன் விழா தொடங்கியது, நவ. 28ம் தேதி கணபதி ஹோமம் வாஸ்து சாந்தி முதற்கால பூஜை நடந்தது. நவ. 29ம் தேதி இரண்டு மற்றும் மூன்றாம் கால பூஜை தீபாராதனை நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேக விழா நேற்று காலை நடந்தது. காலை 9:35 மணிக்கு சந்தானம் முத்துமாரியம்மன், சக்தி விநாயகர், வலம்புரி விநாயகர், பாலசுப்பிரமணியர் கோயில், சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்ற கும்பாபிஷேக விழா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்