மேலும் செய்திகள்
இன்று இனிதாக (01.02.2025) திருவள்ளூர்
01-Feb-2025
திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருகே மானகிரி பஞ்சமுக விஸ்பரூப ஆஞ்சநேய சுவாமி கோயிலில் பிப்.,12ல் லட்சார்ச்னை மகோத்ஸவம் நடைபெற உள்ளது. இக்கோயிலில் வருடாபிேஷகத்தை முன்னிட்டு லட்சார்ச்சனை மகோத்ஸவம் இரு நாட்கள் நடைபெறும். பிப்.,11 அன்று காலை 7:00 மணிக்கு அனுக்ஞை பூஜையுடன் யாகசாலை பூஜைகள் துவங்குகின்றன. தொடர்ந்து பஞ்சமுக மூலமந்திர ஹோமம் நடைபெறும். காலை 11:00 மணிக்கு பூர்ணாகுதிக்கு பின் கடங்கள் புறப்பாடாகி மூலவருக்கு அபிேஷகம் நடக்கும். மாலை 5:00 மணிக்கு மூலவருக்கு சந்தனக்காப்பு அலங்கார சேவையும், சீதா-ராம கல்யாண உற்சவமும், சகஸ்ரநாம அர்ச்சனையும் நடக்கும். பிப்., 12 அன்று காலை8:00 மணிக்கு லட்சார்ச்னை நடைபெறும்.//
01-Feb-2025