உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தொழில் நடத்த லைசென்ஸ் கட்டாயம்: ↓ஏப்.1 முதல் அமலுக்கு வருகிறது

தொழில் நடத்த லைசென்ஸ் கட்டாயம்: ↓ஏப்.1 முதல் அமலுக்கு வருகிறது

தேவகோட்டை நகராட்சிக்கு வியாபாரம், தொழில் செய்வோர், அரசு பணிபுரிவோர் என பலரும் ஆண்டுதோறும் தொழில் வரி செலுத்தி வருகின்றனர். தொழில்கள் நடத்துவதற்கும் உரிமத்திற்கும்ஏப்.1ம் தேதி முதல் மேலும் கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டும்என நகராட்சியில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாநில அரசு புதிய சட்டம் இயற்றியுள்ளதாகவும் அதனை செயல்படுத்துவதாக நகராட்சி அதிகாரிகள் கூறுகின்றனர்.தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு விதிகள்2023ன் படி நகராட்சி பகுதிகளில் நடைபெறும்வர்த்தகம், வியாபாரங்கள்,தொழிற்சாலைகள், தொழிலகம் உட்பட அனைத்தையும் நடத்துவதற்கு கண்டிப்பாக உரிமம் பெற வேண்டும் என்றும் அதற்கான கட்டணத்தையும் நிர்ணயித்துள்ளது.லைசென்ஸ் உரிமம் பெறுவது தொடர்பாக தொழில் வர்த்தகம் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுஉள்ளது. பொருட்களை உற்பத்தி செய்தல் ஒரு பிரிவாகவும், பொருட்களை வாங்கி வைத்து விற்பனை செய்தல் ஒரு பிரிவாகவும், உணவுவிடுதிகள் திருமண மண்டபங்கள் ஒரு பிரிவாகவும் வகைப்படுத்தி உள்ளனர்.உற்பத்தி செய்தல் பிரிவில் குறு, சிறு தொழில் என நான்கு வகையாகப் பகுத்துக் கட்டணம் நிர்ணயம் செய்துள்ளனர். முதல் உற்பத்தி பிரிவில் டீத்துாள், காபித்துாள் தயாரித்தல் உட்பட 48 தொழில்களும், காய்கறி, பழங்கள் மண்பாண்டம் விற்பனை, டீக்கடை , ஜெராக்ஸ், பழைய சாமான் கடை உட்பட 127 விற்பனை தொழில்களும், ஓட்டல், லாட்ஜ், மண்டபங்கள் ஒரு பிரிவாக நிர்ணயித்து உள்ளனர். இந்த புதிய உரிமம் பெறுதல் ஏப். 1 முதல் நகராட்சியில் அமலுக்கு வரவுள்ளது. வர்த்தகர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அதிகாரிகள் கூறி உள்ளனர். நகராட்சி கமிஷனரின்உரிமம் இல்லாமல் தேவகோட்டையில். ஏப். 1 முதல் தொழில் செய்ய முடியாது என நகராட்சி அறிவித்துள்ளது. நகராட்சியின் புதிய லைசென்ஸ் கட்டணம் பற்றி வியாபாரி கண்ணன் கூறுகையில், வியாபாரிகள்ஏற்கனவே தொழில் செய்யும் இடத்திற்கு சொத்துவரி, தொழில் செய்வதற்கேற்ப தொழில் வரி என வியாபாரிகளிடம் நகராட்சி மூலம் வசூலிக்கும் அரசு, தொழில் உரிமம் கட்டணத்தை விரிவு படுத்தி ஒரு தொழில் விடாமல் அனைத்தையும் பட்டியலில் சேர்த்து உள்ளனர். ஆன்லைன் வர்த்தகம் மூலம் விற்பனை பாதித்த நிலையில் வியாபாரிகளிடம் பல வழிகளிலும் வரியை வசூலிப்பது கண்டனத்துக்குரியது. எல்லா பகுதியிலும் வரிகளையும் வியாபாரிகள் தலையில் வைப்பது சரியில்லை. ஏற்கனவே மின் கட்டணம் வேறு உயர்ந்துள்ளது. வியாபாரிகளிடம் வரி வசூல் செய்யும் போது விலைவாசி உயரத்தான் செய்யும். தொழில் உரிம கட்டணத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி