உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  மடப்புரம் உதவி ஆணையர் வெண்ணைமலைக்கு மாற்றம்

 மடப்புரம் உதவி ஆணையர் வெண்ணைமலைக்கு மாற்றம்

திருப்புவனம்: கரூர் வெண்ணைமலை முருகன் கோயில் பிரச்னை விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில் சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் உதவி ஆணையர் கணபதி முருகன் வெண்ணைமலை முருகன் கோயிலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மதுரை மீனாட்சியம்மன் கோயில் உதவி ஆணையராக இருந்த கணபதி முருகன் மடப்புரம் கோயில் உதவி ஆணையராக ஒரு வருடத்திற்கு முன் பொறுப்பேற்றார். நவ., 17ல் கரூர் வெண்ணை மலை முருகன் கோயிலுக்கு சொந்தமான நிலம் கோர்ட் உத்தரவுப்படி கையகப்படுத்தும் பணியில் சர்ச்சை எழுந்தது. நிலத்தில் குடியிருப்பவர்கள் போராட்டத்தில் ஈடுபட அரசியல்வாதிகளும் களம் இறங்கியதால் போராட்டம் சூடு பிடித்தது. இதனையடுத்து வெண்ணை மலை முருகன் கோயில் உதவி ஆணையருக்கு பதிலாக மடப்புரம் உதவி ஆணையர் கணபதிமுருகனை இடமாற்றம் செய்துள்ளனர். உடனடியாக அவர் விடுவிக்கப்பட்டு திங்கள்கிழமை வெண்ணை மலை முருகன் கோயிலில் பதவியேற்க உள்ளார். மடப்புரம் கோயிலுக்கு சிவகங்கை உதவி ஆணையர் கவிதா கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை