உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வக்ப் திருத்த சட்டத்தை கண்டித்து கூட்டம்

வக்ப் திருத்த சட்டத்தை கண்டித்து கூட்டம்

சிவகங்கை; சிவகங்கையில் மாவட்ட தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் வக்ப் திருத்த சட்டத்தை கண்டித்து பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் முகமது இப்ராஹிம் தலைமை வகித்தார். செயலாளர் முகமது ஜகரிய்யா நாபிஈ முன்னிலை வகித்தார். பொருளாளர் சேக் முகமது வரவேற்றார். மாவட்ட அரசு டவுன் காஜி முகமது பாருக் துவக்கி வைத்தார். முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், அமைச்சர் பெரியகருப்பன், எம்.பி., கார்த்தி, எம்.எல்.ஏ.,க்கள் தமிழரசி, மாங்குடி, நகராட்சி தலைவர் துரை ஆனந்த், இந்திய கம்யூ., பேச்சாளர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் வக்ப் திருத்த சட்டத்தை கண்டித்து பேசினர். அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி