உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மூடும் நிலையில் இருந்த குடிநீர் வடிகால் வாரியம் மீட்பு அமைச்சர் நேரு தகவல்

மூடும் நிலையில் இருந்த குடிநீர் வடிகால் வாரியம் மீட்பு அமைச்சர் நேரு தகவல்

காரைக்குடி:தமிழகத்தில் மூடும் நிலையில் இருந்த குடிநீர் வாரியம் மீட்கப்பட்டு தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்று அமைச்சர் நேரு தெரிவித்தார்.காரைக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் முதல் அறிமுக கூட்ட நிகழ்ச்சி நடந்தது. இதில் அமைச்சர். நேரு பேசியதாவது:பம்பிங் ஸ்டேஷன் இல்லாத ஒரு பாதாள சாக்கடை திட்டம் இருக்கிறது என்றால் அது காரைக்குடியில் மட்டும் தான். தமிழகத்தில் பாதுகாக்கப்பட்ட குடிநீர், 628 இடங்களில் எடுக்கப்பட்டு 4.28 கோடி மக்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. தற்போது 7.25 கோடி மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர், குடிநீர் வடிகால் வாரியம் மூலம் பயன்பாட்டிற்கு வந்திருக்கிறது. மேலும், எட்டு கோடி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் 16 கூட்டு குடிநீர் திட்டங்களுக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடுக்காக காத்திருக்கிறது.மத்திய அரசு ஜல்ஜீவன் திட்டத்தை ஓராண்டு காலம் நீட்டித்திருக்கிறது. இந்தத் திட்டத்திற்கு தமிழக அரசு 1 ரூபாய் வழங்கினால் மத்திய அரசு 25 பைசா தருகிறது. மீதி பணம் தமிழக அரசு தருகிறது. சிவகங்கை தொகுதியில் ரூ. 1752 கோடியே 73 லட்சத்திற்கு குடிநீர் திட்ட பணிகள் நடக்கிறது. 95 சதவீத பணிகள் முடிந்துவிட்டன. மார்ச் 2025ல் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.சிவகங்கை மாவட்டத்தில் ரூ. 2 ஆயிரம் கோடி மதிப்பீட்டிலான திட்ட பணிகள் நடக்கிறது. மதுரையில் ரூ. 1800 கோடி மதிப்பீட்டிலும், மதுரை புறநகர் பகுதியில் ரூ.3 ஆயிரம் கோடி மதிப்பீட்டிலும் பணிகள் நடக்கிறது. இதனை, ஒரு மாதத்தில் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். காரைக்குடி நகராட்சியாக இருந்தபோதே ரூ.200 கோடி வரை முதல்வர் நிதி வழங்கி உள்ளார். மாநகராட்சிகளுக்கு ரூ.300 முதல் 400 கோடி வரை வழங்கியுள்ளார். குடிநீர் வடிகால் வாரியம் மூடும் நிலையில் இருந்தது. தற்போது மக்கள் பயன்பாட்டிற்கு சிறப்பாக வந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை