மேலும் செய்திகள்
ரோட்டோரம் வீசப்பட்ட 6 மாத பெண் குழந்தை மீட்பு
25-Feb-2025
தேவகோட்டை : தேவகோட்டையில் பெண் இறப்பு குறித்து டி.எஸ்.பி., தாசில்தார் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம், கொடுங்குளம் அந்தோணிசாமி மனைவி அருள்மலர் செல்வி 38. இவர் ஜன., 3 ல் தனது குழந்தைக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதில், தேவகோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். அங்கிருந்த அருள்மலர்செல்விக்கும் திடீர் காய்ச்சல் ஏற்பட்டு, அங்கு சிகிச்சை பெற்றார். இதற்காக டாக்டர் ஊசி போட்டதும் வலிப்பு ஏற்பட்டு அப்பெண் உயிரிழந்தார். இவரை சொந்த ஊர் எடுத்து சென்று அடக்கம் செய்தனர். இப்பெண் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தேவகோட்டை போலீசில் புகார் அளித்தனர்.இதையடுத்து ஆர்.எஸ்.,மங்கலம் தாசில்தார் வரதராஜன், டி.எஸ்.பி., கவுதம் ஆகியோர் பெண்ணின் உடலைதோண்டி எடுத்து விசாரித்தனர். இறந்த பெண் சிகிச்சை பெற்ற மருத்துவமனை சார்ந்த வீடியோ ஆதாரம் உள்ளதால், அடுத்தகட்ட விசாரணை மேற்கொள்ளப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
25-Feb-2025