உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தேசிய ஸ்கேட்டிங் போட்டி பதக்கம் பெற்ற மாணவர்கள் 

தேசிய ஸ்கேட்டிங் போட்டி பதக்கம் பெற்ற மாணவர்கள் 

சிவகங்கை: ஹரியானாவில் நடந்த தேசிய ஸ்கேட்டிங் போட்டியில் 22 தங்கம், 7 வெள்ளி, 3 வெண்கல பதக்கம் பெற்று, சிவகங்கை மாவட்ட மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.ஹரியானாவில், ஸ்டூடண்ட் ஒலிம்பிக் அசோசியேஷன் சார்பில் தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டி நடந்தது. இந்திய அளவில் 6 மாநிலங்களை சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர். தமிழக அணி சார்பில் சிவகங்கை மாவட்டத்தில் இருந்து சிவகங்கை ஆக்ஸ்வர்ட் மெட்ரிக் பள்ளி, காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளி, சிவகங்கை கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை சேர்ந்த 17 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.வயது 11 முதல் 17க்கு உட்பட்ட பிரிவு போட்டிகளில் 200 மற்றும் 500 மீட்டர் ஸ்கேட்டிங்கில் சிவகங்கை மாவட்ட மாணவ, மாணவிகள் 22 தங்கம், 7 வெள்ளி, 3 வெண்கல பதக்கங்களை வென்றனர். இவர்களுக்கு தேசிய பயிற்சியாளர் தவேந்திரன், எஸ்.எல்., அகாடமி பயிற்சியாளர்கள் தயாளன், ராஜசேகர் பயிற்சி அளித்தனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை கலெக்டர் ஆஷா அஜித் பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை