உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / நாடு முழுவதும் சுற்றுலா செலவு கணக்கெடுப்பு தொடக்கம்

நாடு முழுவதும் சுற்றுலா செலவு கணக்கெடுப்பு தொடக்கம்

கீழடி: தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் 75வது ஆண்டு விழாவை முன்னிட்டு கொந்தகையில் சுற்றுலா செலவு மற்றும் போக்குவரத்து குறித்த கணக்கெடுப்பு தொடங்கப் பட்டது. நாடு முழுவதும் வளர்ச்சி திட்டங்கள், பாதிப்பு குறித்து அறிந்து கொள்ள புள்ளியியல் துறை கணக்கெடுப்பு மிகவும் அவசியம், வருடம்தோறும் புள்ளியியல் துறை மூலம் எடுக்கப்படும் கணக்கெடுப்பை வைத்து நாட்டின் வளர்ச்சிக்கான திட்டங்கள் செயல் படுத்தப்படுகின்றன. ஒருங்கிணைந்த விருது நகர், சிவகங்கை, ராமநாதபுர மாவட்டங்களை உள்ளடக்கிய தேசிய புள்ளி யியல் துறை சார்பாக கீழடி அருகே கொந்தகையில் சுற்றுலா செலவு மற்றும் போக்குவரத்து குறித்த கணக்கெடுப்பிற்கான தொடக்க விழா நேற்று நடந்தது. உதவி இயக்குனர் ரத் தினம் விழாவை தொடங்கி வைத்தார். தாசில்தார் விஜய குமார், புள்ளியியல் துறை உதவி இயக்குனர்கள் கருப்புச்சாமி, ரமேஸ்வரி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை