மேலும் செய்திகள்
வாகனம் செல்ல முடியாத பெருமானேந்தல் ரோடு
2 minutes ago
திறக்கப்படாத உர நிறுவன மேலாளர் அலுவலகம்
4 minutes ago
காரைக்குடியில் சாலையில் சாய்ந்த மரம்
6 minutes ago
காரைக்குடி: புதுவயல்,அறந்தாங்கி சாலையில் அமைக்கப்பட்ட புதிய மின்கம்பங்கள் பல தரமற்ற உடைந்து விழும் நிலையில் இருப்பதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனர். காரைக்குடி அருகேயுள்ள புதுவயல் அறந்தாங்கி சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. நெடுஞ்சாலை ஓரம் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பங்கள் சேதமடைந்து உடைந்து விழும் நிலையில் உள்ளது. இந்நிலையில், சேதமடைந்த மின்கம்பங்கள், அகற்றப்பட்டு புதிய மின்கம்பங்கள் நடும் பணி நடந்தது. இவ்வாறு நடப்பட்ட மின்கம்பங்கள் தரமற்ற நிலையில் இருப்பதால், சில மாதங்களிலேயே உடைந்து விடுகிறது. கருநாவல்குடி அருகே சாலையோரம் உள்ள மின்கம்பத்தின் மேல் பகுதி முறிந்து விழும் நிலையில் உள்ளது. சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடனே கடந்து செல்ல வேண்டியுள்ளது.
2 minutes ago
4 minutes ago
6 minutes ago