உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / புதிய ரேஷன் கடை திறப்பு

புதிய ரேஷன் கடை திறப்பு

திருப்புத்துார்: திருப்புத்துார் அச்சுக்கட்டுத் தெருவில் புதிய ரேஷன் கடையை அமைச்சர் பெரியகருப்பன் திறந்து வைத்தார். திருப்புத்துார் காளியம்மன் கோயிலில் உள்ள ரேஷன்கடையில் 1300க்கும் மேற்பட்ட கார்டுதாரர்கள் இருந்தனர். அச்சுக்கட்டு பகுதியினர் இக்கடையில் பொருட்கள் வாங்க சிரமம் ஏற்பட்டதை அடுத்து அதிலிருந்து 532 கார்டுகள் தனியாக பிரித்து புதிய கடை அச்சுக்கட்டுப் பகுதியில் திறக்கப்பட்டது.பேரூராட்சி தலைவர் கோகிலாராணி, செயல் அலுவலர் தனுஷ்கோடி, பேரூராட்சி கவுன்சிலர் ராபின்முகமது உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை