உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / நாட்டு கோழி குஞ்சுகள் பெண்களுக்கு வினியோகம்

நாட்டு கோழி குஞ்சுகள் பெண்களுக்கு வினியோகம்

சிவகங்கை, சிவகங்கை மாவட்டத்தில் 100 பெண்களுக்கு நாட்டு கோழி குஞ்சுகள் வினியோகிக்கப்பட்டன.புதுவாழ்வு திட்ட சுயஉதவிக் குழு பெண்களின் மேம்பாட்டிற்காக ஊரக புறக்கடை கோழி பண்ணைத் திட்டத்தில் நாட்டு கோழி குஞ்சுகள் வழங்கப்படுகின்றன. 2016--17க்கு சிவகங்கை மாவட்டத்தில் காஞ்சிரங்கால், அரசனுார், செம்பூர், கோவானுார், கூத்தாண்டம், ஒக்கூர், மேலப்பூங்குடி, முளைக்குளம், எஸ்.புதுார், இளையான்குடி, புழுதிப்பட்டி, பூவந்தி, கானுார், கிளாதரி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 100 பெண்களுக்கு தலா 2,500 ரூபாயிலான 20 கோழி குஞ்சுகள், தீவனம், தண்ணீர் கிண்ணி, கூண்டு வழங்கப்பட்டன. கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் கருணாகரன் தெரி வித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை