உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / போதிய மழை இல்லை: விவசாயிகள் சோகம்

போதிய மழை இல்லை: விவசாயிகள் சோகம்

சாக்கோட்டை வட்டாரத்தில் 4 ஆயிரம் எக்டேரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இப்பகுதியில், கண்மாய் மற்றும் போர்வெல் மூலமே விவசாயப் பணி நடைபெறுகிறது. கடந்த ஆடியில் விவசாயிகள் உழவுப் பணி மேற்கொண்டனர். தொடர்ந்து, ஆடிப்பட்டத்தில், நெல் விதைப்பு பணி நடந்தது. உழவு, உரம், விதை என ஏக்கருக்கு விவசாயிகள் ரூ.30 ஆயிரத்துக்கும் மேல் செலவு செய்துள்ளனர்.போதிய மழை இல்லாத நிலையில், போர்வெல் உள்ள விவசாயிகள் விவசாய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். களத்துார், நாட்டுச்சேரி, ஜெயங்கொண்டான், பெரிய கொட்டகுடி மித்ராவயல், பெரிய கோட்டை உட்பட பல பகுதிகளிலும் மழையில்லாததாலும், கண்மாயில் தண்ணீர் இல்லாததாலும் பயிர்கள் கருகி வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.விவசாயி பாலமுருகன் கூறுகையில்: கடந்த ஆடி மாதம் நெல் விதைப்பில் ஈடுபட்டோம். தொடர்ந்து உழவு உரம் என ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வரை செலவழித்துள்ளோம்.டீலக்ஸ் மற்றும் சி.எஸ்.ஆர்., நெல் சாகுபடி செய்துள்ளோம். தமிழகத்தின் பல பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் இப்பகுதியில் மழையே இல்லை. கண்மாய்கள் வறண்டு கிடக்கிறது. நெற்பயிர்கள் பரிந்து வரும் நிலையில், தண்ணீர் கிடைக்காமல் கண்ணீர் சிந்தி வருகிறோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ