உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / என்.எஸ்.எஸ்., திட்ட முகாம்

என்.எஸ்.எஸ்., திட்ட முகாம்

இளையான்குடி: இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி என்.எஸ்.எஸ்., சார்பில் கல்லுாரிக்கு, அரசு பள்ளி மாணவர்கள் களப்பயணமாக வந்தனர். முதல்வர் ஜபருல்லாகான் தலைமை வகித்தார். சக்கந்தி, சாத்தனூர், முனைவென்றி அரசு பள்ளி மாணவர்கள் கல்லூரியில் உள்ள அனைத்து துறைகள் மற்றும் ஆய்வகங்களை பார்வையிட்ட பின்னர் நாட்டு நலப்பணித்திட்ட மாணவிகள் நடத்திய கலைநிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.தலைமையாசிரியர் பாண்டித்துரை, சாத்தனூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் கண்ணன், ஜான் ராஜா, பிரியங்கா, சக்கந்தி அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் ஆசைத்தம்பி, ஜெயராமன், ஆசிரிய பயிற்றுநர் பஞ்ச நாதன் பங்கேற்றனர். என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர்கள் பீர்முகம்மது, அப்ரோஸ், சேக் அப்துல்லா, பாத்திமா கனி ஏற்பாட்டை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ