உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சத்துணவு ஊழியர் விளக்க கூட்டம் 

சத்துணவு ஊழியர் விளக்க கூட்டம் 

சிவகங்கை : சிவகங்கை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பெண் சத்துணவு ஊழியர்கள் மீது விரோத போக்கை கடைபிடிக்கும் சத்துணவு திட்ட அதிகாரிகளை கண்டித்து விளக்க கூட்டம் நடந்தது.சிவகங்கை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் நடந்த கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் பூப்பாண்டி தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் செல்வராணி, மாவட்ட தலைவர் பாண்டி, மாவட்ட செயலாளர் லதா, பொருளாளர் நாகராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன், அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாநில செயலாளர் பாண்டி, நிதி காப்பாளர் நடராஜன் ஆகியோர் விளக்க உரை ஆற்றினர். கூட்ட முடிவில் ஊழியர் விரோத போக்கில் ஈடுபடும் துணை பி.டி.ஓ., மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ