உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கோடை காலம் தொடக்கம் விற்பனைக்கு வந்த பதனீர்

கோடை காலம் தொடக்கம் விற்பனைக்கு வந்த பதனீர்

திருப்புவனம் : கோடை வெயிலின் தாக்கம் முன்கூட்டியே தொடங்கியதை அடுத்து பதனீர் விற்பனையும் களை கட்டியுள்ளது.தமிழகத்தில் ஏப்ரலில் தொடங்கி ஜூன் வரை வெயிலின் தாக்கம் இருக்கும். கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்க பொதுமக்கள் இளநீர், பழச்சாறு, குளிர்பானங்கள், சர்பத் உள்ளிட்டவைகளை அருந்துவது வழக்கம்.மார்ச்சில் தொடங்கி மூன்று மாத காலத்திற்கு பதனீர் விற்பனை செய்யப்படுவது வழக்கம், திருப்புவனம் வட்டாரத்தில் பனை மரங்கள் அதிகம் இல்லாத நிலையில் வெளியூர்களில் இருந்து பதனீர் கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.ஒரு லிட்டர் கடந்தாண்டு 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இந்தாண்டு 100 ரூபாயாக உயர்ந்துள்ளது. பதனீர் போதிய அளவு கிடைக்கவில்லை என்பதால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை