மேலும் செய்திகள்
போச்சம்பள்ளி வாரச்சந்தை தொடர் மழையால் 'வெறிச்'
03-Dec-2024
சிவகங்கை:அரசு ஊழியர், பென்ஷனர்கள் ஜன., 1 முதல் களஞ்சியம் செயலியில் மட்டுமே சம்பள பில், பண்டிகை முன்பணம் பெற விண்ணப்பிக்க வேண்டும் என அரசின் சம்பள கணக்கு அலுவலகம் தெரிவித்துள்ளது.அரசு ஊழியர், ஆசிரியர்கள், பென்ஷனர்கள் அலைபேசி வழியில் சம்பள பில், சம்பள பட்டியல் அறிக்கைகளை களஞ்சியம் செயலி மூலம் மட்டுமே பதிவிறக்கம் செய்ய வேண்டும். இந்நடைமுறை ஜன., 1 முதல் அமலுக்கு வருகிறது. மேலும் தற்செயல் விடுப்பு, ஈட்டிய விடுப்பு, பண்டிகை முன்பணம், வருங்கால வைப்பு நிதி முன்பணம் உள்ளிட்டவற்றை செயலியில் மட்டுமே விண்ணப்பித்து பெற வேண்டும். பென்ஷனர்கள் இந்த செயலி மூலம் பென்ஷன் பட்டியல், பென்ஷன் எடுத்த விபரம் உள்ளிட்டவற்றை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
03-Dec-2024