உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மானாமதுரையில் கூட்டு குடிநீர் திட்ட குழிகள் மூடாததால் மக்கள் அவதி

மானாமதுரையில் கூட்டு குடிநீர் திட்ட குழிகள் மூடாததால் மக்கள் அவதி

மானாமதுரை: மானாமதுரை பகுதியில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்திற்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் மூடாமல் இருப்பதினால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.15 ஆண்டிற்கு முன் திருச்சி காவிரி ஆற்றில் இருந்து ராமநாதபுரத்திற்கு காவிரி கூட்டுகுடிநீர் திட்டம் செயல்படுத்தினர். இரண்டாம் கட்ட பணியாக கரூரில் இருந்து சிவகங்கை வழியாக ராமநாதபுரத்திற்கு குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.மானாமதுரையை ஒட்டியுள்ள பகுதிகளில் குழாய்கள் பதிக்க தோண்டப்பட்ட பள்ளங்கள் மூடப்படாமல் உள்ளன. வழி விடு முருகன் கோயில் அருகே குழி தோண்டி ஒரு மாதத்திற்கு மேலாகியும் மூடாமல் கிடப்பதால், வாகன ஓட்டிகள் விபத்திற்கு உள்ளாகின்றனர். மதுரை - - ராமேஸ்வரம் 4 வழிச்சாலையிலும் ஆங்காங்கே பள்ளங்களை தோண்டி போட்டு வேலை முடிந்தும் மூடாமல் விட்டுவிட்டனர். எனவே குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், காவிரி குடிநீர் திட்ட குழாய் பதிப்பு பணி முடிந்த தெருக்களில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சரி செய்து, ரோடு வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி