மேலும் செய்திகள்
சிங்கம்புணரியில் மணி மண்டபம் திறப்பு
18 minutes ago
நெற்குப்பையில் நுாலக வார விழா
19 minutes ago
மாணவருக்கு பாராட்டு
20 minutes ago
குழந்தைகள் தின விழா
21 minutes ago
சிவகங்கை: மாவட்ட அளவில் அரசு, தனியார், மினி பஸ்களில் படிக்கட்டுகளில் பயணிகள் தொங்கியபடி பயணித்தால் அந்த பஸ்களின் பெர்மிட் ரத்து செய்யப்படும் என கலெக்டர் பொற்கொடி தெரிவித்தார். அவர் கூறியதாவது: சிவகங்கை மாவட்ட அளவில் ெஹல்மெட் அணியாமல் டூவீலர் ஓட்டுவோரின் லைசென்ஸ் 3 மாதத்திற்கு தற்காலிக தடை விதிக்கப்படும். மேலும் மோட்டார் வாகன சட்டம் 1988 பிரிவு 129 படி ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும். வாகனங்களை மது அருந்தியும், சீட் பெல்ட் அணியாமலும், அலைபேசி பேசியபடி ஓட்டுவோரின் லைசென்ஸ் தற்காலிக தடை விதிக்கப்படும். ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ் பறிமுதல் செய்யப்படும். ஆட்டோக்களில் அனுமதித்த நபர்களை மட்டுமே ஏற்றி செல்ல வேண்டும். கூடுதலாக ஏற்றி சென்றால் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அனுமதி சீட்டும் ரத்தாகும். மினி பஸ், பிற பஸ்களில் கண்டிப்பாக படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணிகளை ஏற்றி செல்லக்கூடாது. அதையும் மீறி பயணிகளை படிக்கட்டில் ஏற்றி செல்வது தெரிந்தால் பஸ் பெர்மிட் தற்காலிக தடை செய்வதோடு, பஸ்சும் சிறை பிடிக்கப்படும். பஸ் டிரைவர்களும் நிர்ணயித்த வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும். அதிவேகமாக பள்ளி பஸ்களை ஓட்டும் டிரைவரின் லைசென்ஸ் தற்காலிக தடை விதிக்கப்படுவதோடு, பள்ளி பஸ்சின் பெர்மிட் ரத்து செய்யப்படும் என்றார்.
18 minutes ago
19 minutes ago
20 minutes ago
21 minutes ago