உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மடப்புரம் அழைத்து வந்து நிகிதாவிடம் விசாரிக்க திட்டம்

மடப்புரம் அழைத்து வந்து நிகிதாவிடம் விசாரிக்க திட்டம்

திருப்புவனம்:அஜித்குமார் கொலை வழக்கு சம்பந்தமாக புகார்தாரரான நிகிதாவை மடப்புரம் அழைத்து வந்து விசாரிக்க சி.பி.ஐ., அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். ஜூன் 27ல் மடப்புரம் வந்த பக்தர் நிகிதா காரில் இருந்த தங்க நகை திருடு போனது தொடர்பான போலீசார் விசாரணையின் போது அஜித்குமார் உயிரிழந்தார், ஜூலை 12 முதல் சி.பி.ஐ., டி.எஸ்.பி., மோஹித்குமார் தலைமையில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். புகார்தாரரான நிகிதாவிடம் மதுரை சி.பி.ஐ., அலுவலகத்தில் ஜூன் 25ல் மூன்று மணி நேரம் விசாரணை நடந்தது. நிகிதாவும் அவரது தாயார் சிவகாமியும் 27ம் தேதி மடப்புரம் வந்தது முதல் மதியம் திருப்புவனம் போலீஸ் ஸ்டேஷனுக்கு புகார் கொடுக்க சென்றது வரை உள்ள சி.சி.டி.வி., காட்சிகளை ஆய்வு செய்த சி.பி.ஐ., அதிகாரிகள் அதே போல நிகிதாவை அழைத்து வந்து கோயில் வாசல், போலீஸ் ஸ்டேஷன் உள்ளிட்ட இடங்களில் விசாரணை நடத்த உள்ளனர். 13வது நாளாக சி.பி.ஐ., விசாரணை அஜித்குமார் கொலை தொடர்பாக 13வது நாளாக நேற்று சி.பி.ஐ., அதிகாரிகள் மடப்புரத்தில் விசாரணை நடத்தினர். அஜித்குமாரை ஜூன் 28ல் திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு ஆட்டோவில் ஏற்றி சென்ற அய்யனார், போலீசார் அடித்து சித்ரவதை செய்து அஜித்குமாரை கொலை செய்ததாக குற்றம் சாட்டிய அவரது உறவினர் கீர்த்தியிடமும் விசாரணை நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை