உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் துவக்கம்

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் துவக்கம்

மானாமதுரை : மானாமதுரை தாலுகாவில் உங்களைத் தேடி உங்கள் ஊரில், திட்டம் துவங்கப்பட்டதை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் தலைமையில் மானாமதுரை தாலுகா அலுவலகத்தில் நடந்தது. பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரசு அலுவலர்களுடன் தாலுகா அளவில் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ள வேண்டியபணிகள் குறித்து எம்.எல்.ஏ., தமிழரசி, மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவராமன், தாசில்தார் ராஜா மற்றும் அரசு துறை அதிகாரிகள் விவாதித்தனர்.மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் மானாமதுரை தாலுகாவில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கு சென்று ரேஷன் கடைகள், அங்கன்வாடி மையங்கள்,நெல் கொள்முதல் நிலையங்கள், இ சேவை மையங்கள், சுகாதார நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் நடைபெற்ற முகாமில் மக்களின் கோரிக்கை மனுக்களை பெற்று நடவடிக்கை எடுக்குமாறு அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை