உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / குடிநீர் கேட்டு மறியல்

குடிநீர் கேட்டு மறியல்

காரைக்குடி: காரைக்குடி செஞ்சை கீழ ஊரணி பகுதியில் குடிநீர் கேட்டு மக்கள் காலி குடங்களுடன் சாலையோரம் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.காரைக்குடி மாநகராட்சி 31 வது வார்டு செஞ்சை கீழ ஊரணி பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளனர்.இப்பகுதியில் சாலை, கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதியின்றி மக்கள் சிரமப்படுகின்றனர்.மாநகராட்சி சார்பில், வழங்கப்படும் குடிநீரும் முறையாக கிடைக்கவில்லை என்று மக்கள் புகார் கூறுகின்றனர்.பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லாததால் நேற்று அப்பகுதி மக்கள் காலி குடங்களுடன் தேவகோட்டை காரைக்குடி சாலையில் மறியல் செய்ய முற்பட்டனர்.போலீசார் மக்களை சாலையோரம் அமர வைத்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். மாநகராட்சி அதிகாரிகள் அவர்களை சமாதானம் செய்து முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி தெரிவித்ததால் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ