உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / முத்தனேந்தலில் மீண்டும் ரயில்வே ஸ்டேஷன்

முத்தனேந்தலில் மீண்டும் ரயில்வே ஸ்டேஷன்

மானாமதுரை: முத்தனேந்தலில் மீண்டும் ரயில்வே ஸ்டேஷனை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராம மக்கள் பா.ஜ., தலைவரிடம் வேண்டுகோள் விடுத்தனர். மானாமதுரையில் இருந்து மதுரை செல்லும் ரயில் பாதையில் முத்தனேந்தலில் ரயில்வே ஸ்டேஷன் செயல்பட்டு வந்தது. சுற்றுவட்டார 40க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள், மாணவர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பயன் பெற்று வந்தனர். இத்தடத்தில் மீட்டர் கேஜ் பாதை, அகல ரயில் பாதையாக மாற்றப்பட்ட போது முத்தனேந்தல் ரயில்வே ஸ்டேஷன் மூடப்பட்டது. இதனைத் தொடர்ந்து 15 வருடங்களுக்கும் மேலாக அப்பகுதி மக்கள் மீண்டும் ரயில்வே ஸ்டேஷனை திறக்க கோரிக்கை விடுத்து வருகின்றனர். காரைக்குடிக்கு வந்த பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரனை முன்னாள் ஒன்றிய தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் கிராம மக்கள் சந்தித்து மீண்டும் முத்தனேந்தல் ரயில்வே ஸ்டேஷனை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை