உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மடப்புரத்தில் சேதமான குடிநீர் தொட்டி அகற்றம் குடிநீருக்கு மாற்று ஏற்பாடு

மடப்புரத்தில் சேதமான குடிநீர் தொட்டி அகற்றம் குடிநீருக்கு மாற்று ஏற்பாடு

திருப்புவனம்: திருப்புவனம் அருகே மடப்புரத்தில் சேதமடைந்த குடிநீர் மேல்நிலை தொட்டியை இடித்து அகற்றினர்.மடப்புரத்தில் பிரசித்தி பெற்ற காளி கோயில் எதிரே 25 ஆண்டுக்கு முன் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல் நிலை நீர்தேக்க தொட்டி கட்டினர்.இங்கிருந்து கோயில், உதவி கமிஷனர் அலுவலகம், சுகாதார வளாகத்திற்கு தண்ணீர் பெற்று வந்தனர். மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆன படியால் தொட்டியை தாங்கி நிற்கும் தூண்களில் விரிசல்கள் ஏற்பட்டன.தொட்டியின் உட்பகுதியிலும் பல இடங்களில் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. ஆடி பிறந்துள்ள நிலையில் பக்தர்களின் வருகை பன்மடங்கு அதிகரிக்கும் என்பதால் விபத்து ஏற்படும் முன் அவற்றை அகற்ற கோயில் நிர்வாகம் முடிவு செய்திருந்தனர். அதன்படி நேற்று காலை 9:00 மணிக்கு பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றினர். மீண்டும் 3 மாதத்திற்குள் புதிதாக மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்படும். அதுவரை தற்காலிகமாக பக்தர்கள் உடைமாற்றும் கட்டடத்தின் மாடியில் 3 ஆயிரம் லிட்டர் கொள்ளவுள்ள மூன்று சிண்டெக்ஸ் தொட்டியில் இருந்துகுடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை