உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கல்லலில் வேகமாக செல்லும் வாகனங்களால் விபத்து அபாயம்

கல்லலில் வேகமாக செல்லும் வாகனங்களால் விபத்து அபாயம்

காரைக்குடி: கல்லலில் பள்ளி அருகே வேகமாக செல்லும் வாகனங்களால் குழந்தைகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.கல்லல் - காரைக்குடி சாலையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி, அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளியின் எதிரே எச்சரிக்கை போர்டு இல்லாததால் அவ்வழியாக அதிவேகமாக செல்லும் பைக்குகள் மற்றும் வாகனங்களால் குழந்தைகளுக்கு அபாயம் நிலவுகிறது.எஸ்.முத்தையா கூறுகையில்; காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி குழந்தைகள் சாலையை கடந்து செல்கின்றனர். அதிவேகமாக செல்லும் வாகனங்களால் குழந்தைகளுக்கு அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளதாக பெற்றோர் அச்சமடைந்து வருகின்றனர். தற்போது கல்லல் காரைக்குடி சாலையில் 2 கி.மீ துாரம் சாலை விரிவாக்க பணி நடந்து வருகிறது. எனவே, பள்ளி வாயிலின் இரு புறமும் எச்சரிக்கை போர்டு வைக்க வேண்டும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்