உள்ளூர் செய்திகள்

பள்ளி ஆண்டு விழா

சிவகங்கை: சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா நடந்தது.சிவகங்கை சமஸ்தான பரம்பரை அறங்காவலரும் பள்ளி முகமைக்குழு நிரந்தர தலைவருமான டி.எஸ்.கே. மதுராந்தகி நாச்சியார் தலைமை வகித்தார். பள்ளிக்குழுத்தலைவர் ராஜ்குமார் மகேஷ்துரை முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் சுந்தரராஜன் வரவேற்றார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலுமுத்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.மாவட்டக்கல்வி அலுவலர் இடைநிலை உதயக்குமார், பள்ளிச்செயலர் குமரகுரு, முன்னாள் மாணவர் பட்டயக்கணக்காளர் ஜிதேந்திரன், பேராசிரியர் ேஹமா, முன்னாள் முதுகலை ஆசிரியர் ராமகிருஷ்ணன் பேசினர். முதுகலை ஆசிரியர் ஜான்பிரிட்டோ, கண்ணப்பன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். ஆசிரியர் பிரபாகரன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி