உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ரயில்வே போலீசுக்கு அரிவாள் வெட்டு

ரயில்வே போலீசுக்கு அரிவாள் வெட்டு

காரைக்குடி: காரைக்குடி அருகே உள்ள கோட்டையூர் உதயம் நகரை சேர்ந்தவர் நாகேந்திரன் மகன் பாலசுப்பிரமணியம் 45. ரயில்வே ஸ்டேஷனில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று அழகப்பா இன்ஜி., கல்லூரி பின்புறம் கண்டனுார் ரோட்டில் பைக்கில் திரும்பினார். அங்கு நின்று கொண்டிருந்த மூன்று பேர் பாலசுப்பிரமணியனிடம் முகவரி கேட்பது போல் பைக்கை நிறுத்தி விசாரித்துள்ளனர். திடீரென்று அவர்கள் பாலசுப்பிரமணியத்தை அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டினர். கைவிரல் துண்டானது. 8 இடங்களில் வெட்டு பட்ட பாலசுப்ரமணியம் தப்பி ஓடினார். அருகில் இருந்த குடியிருப்புக்கு பாலசுப்பிரமணியன் ஓடிய நிலையில் அவர்கள் தப்பினர். ஆபத்தான நிலையில் பாலசுப்பிரமணியன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்