உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு முக்கியம் புதிய எஸ்.பி., பேட்டி 

சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு முக்கியம் புதிய எஸ்.பி., பேட்டி 

சிவகங்கை : ''சட்டம் ஒழுங்கு பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் தந்து பணிபுரிவேன்,'' என சிவகங்கை புதிய எஸ்.பி., டோங்கரே பிரவீன் உமேஷ் தெரிவித்தார்.சிவகங்கை எஸ்.பி., பி.கே., அர்விந்த், நேற்று மாலை புதிய எஸ்.பி., டோங்கரே பிரவீன் உமேஷிடம் பொறுப்புகளை ஒப்படைத்தார். மாவட்டத்தின் 38வது எஸ்.பி.,யாக அவர் பொறுப்பேற்றார். இவர் 2016ல் ஐ.பி.எஸ்., அதிகாரியானார். முதலில் ராமநாதபுரம், திருச்சி (திருவெறும்பூர்) உதவி எஸ்.பி., யாக பணிபுரிந்தார். பின்னர் தமிழக கவர்னரின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்தார். தேனியில் 2 ஆண்டு 7 மாதங்கள் எஸ்.பி.,யாக இருந்து, மதுரைக்கு மாற்றப்பட்டார். தேர்தல் கமிஷன் விதிமுறை காரணமாக மதுரையில் இருந்த டோங்கரே பிரவீன் உமேஷ், சிவகங்கைக்கு மாற்றப்பட்டு நேற்று பதவியேற்றார்.அவர் கூறியதாவது:மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் முழு கவனம் செலுத்தப்படும். அதற்கு முக்கியத்துவம் கொடுத்து போலீசார் பணிபுரிவார்கள், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை