மேலும் செய்திகள்
பயிர் காப்பீடு திட்டம் விண்ணப்பிக்க அழைப்பு
29-Jul-2025
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் சாகுபடி செய்துள்ள வாழை பயிர்களுக்கு காப்பீடு செய்யலாம் என கலெக்டர் பொற்கொடி தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: மாவட்ட அளவில் 1,200 எக்டேரில் விவசாயிகள் வாழை சாகுபடி செய்து வருகின்றனர். வறட்சி, வெள்ளம், நோய் தாக்குதல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு, பயிர் விளைச்சல் குறையும் போது ஏற்படும் இழப்பினை ஈடுகட்ட பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தின் மூலம் காப்பீடு செய்யலாம். இந்த ஆண்டு குறுவை பருவத்தில் பயிரிட்டுள்ள வாழை பயிருக்கு சிவகங்கை, தேவகோட்டை, இளையான்குடி, திருப்புவனம் மற்றும் சிங்கம்புணரி வட்டார விவசாயிகள் காப்பீடு செய்து பயன் பெறலாம். காப்பீட்டு தொகை எக்டேருக்கு ரூ.2 லட்சத்து 21 ஆயிரத்து 312, இதற்கான பிரீமிய தொகை ரூ.11 ஆயிரத்து 65 மற்றும் 60 பைசாவை அந்தந்த தேசிய வங்கி, தொடக்க கூட்டுறவு கடன் சங்கம் அல்லது இ- சேவை மையங்கள் மூலம், செப்., 16க்குள் செலுத்த வேண்டும். மேலும் விபரங்களுக்கு வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம், என்றார்.
29-Jul-2025