உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தேரோடும் வீதியில் ஓடும் கழிவு நீர்

தேரோடும் வீதியில் ஓடும் கழிவு நீர்

மானாமதுரை : மானாமதுரை அருகே உள்ள கட்டிக்குளத்தில்உள்ள தெருக்களிலும்,தேரோடும் வீதிகளிலும் கழிவு நீர் தேங்கி கிடப்பதால் சுகாதாரக்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.மானாமதுரை அருகே உள்ள கட்டிக்குளம் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர்வசித்து வருகின்றனர்.இங்குள்ள பல்வேறு தெருக்களிலும்,தேரோடும்வீதிகளிலும் இதுவரை கழிவு நீர் வடிகால் வசதி இல்லாததால் வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவு நீரும், மழை நீரும் ரோட்டில் தேங்கி கிடப்பதால் கிராம மக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.வீடுகளுக்கு முன் கழிவுநீர் தேங்கி நிற்பதால் கொசுக்கள் மூலம் பல்வேறு நோய் ஏற்பட்டு வருவதாகவும் மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.ஊராட்சி தலைவர் சாந்தி தமிழ் நேசன் கூறுகையில், கட்டிக்குளம் கிராமத்தில் உள்ள தெருக்களில் தற்போது ஆக்கிரமிப்பு அதிகளவில் உள்ளன. ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய் துறையினருக்கு மனு கொடுக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றிய பின்னர் தெருக்களிலும்,தேரோடும் வீதிகளிலும் ரூ. 45 லட்சம் செலவில் கழிவுநீர் வடிகால் கட்டுவதற்கு திட்ட மதிப்பீடு தயார் செய்து அனுப்பப்பட்டுள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை