அக்.22ல் சஷ்டி விழா காப்பு கட்டுதல்
தேவகோட்டை: தேவகோட்டை மீனாட்சி கோயிலில் இவ்வாண்டு சஷ்டி விழா அக். 22ல் பாலதண்டாயுதபாணிக்கு காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது. அக். 22 முதல் அக். 26 ந் தேதி வரை தண்டாயுதபாணிக்கு லட்சார்ச்சனை நடை பெற உள்ளது. முருகபெருமான் தினமும் சிறப்பு அலங்காரத்தில் யானை, தங்க குதிரை, கைலாச வாகனம், வெள்ளி ரிஷப வாகனங்களில் வீதி உலா வருவார். ஆறாம் நாள் சஷ்டி தினத்தன்று சூரசம்ஹாரம் அதனை தொடர்ந்து , 7 ம் நாள் தெய்வானை திருமணம், எட்டாம் நாள் வள்ளி திருமணம் தொடர்ந்து புஷ்ப பல்லக்கில் முருக பெருமான் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.