| ADDED : மார் 12, 2024 11:33 PM
இளையான்குடி : தாயமங்கலத்தில் பணியாற்றும் முடி திருத்தும் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகை போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு சி.ஐ.டி.யு.,மாவட்ட தலைவர் வீரையா, மாவட்ட செயலாளர் சேதுராமன் தலைமை தாங்கினர். மார்க். கம்யூ., மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சுரேஷ்,அழகர்சாமி ஒன்றிய செயலாளர் ராஜூ,சி.ஐ.டி.யு., பொது தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் வேங்கையா, உள்ளாட்சி ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முருகானந்தம், மாதர் சங்க மாவட்ட செயலாளர் சாந்தி, பொருளாளர் ஜெயந்தி,தமிழ்நாடு மருத்துவர் சமுதாய பேரவை சங்க நிர்வாகிகள் சுப்பிரமணியன், அழகர்சாமி, கண்ணன், கருப்புசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.