மேலும் செய்திகள்
பெட்ரோல் குடித்து ஒருவர் பலி
18 hour(s) ago
பயிற்சி முகாம்
18 hour(s) ago
சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை
18 hour(s) ago
தேவகோட்டையில் அம்பு எய்தல் வைபவம்
18 hour(s) ago
சிலை பிரதிஷ்டை
18 hour(s) ago
மானாமதுரை : மானாமதுரையில் காணாமல் போன ஆடுகளை தேடுவதில், இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 5 பேர் காயமுற்றனர். மானாமதுரை அருகே கே.பெருங்காரையை சேர்ந்த நட்டுச்சாமி மனைவி காளிமுத்து (45). கடந்த சில தினங்களுக்கு முன் இவர் வளர்த்த ஆடுகள் சில காணாமல் போனது. ஆடுகளை, காளிமுத்துவின் தந்தை பொன்னுமுத்து (60) தேடினார். அதே ஊரை சேர்ந்த குப்புச்சாமி மகன் சுப்பிரமணி நடத்தும் ஆட்டு கிடைகளுக்குள் சென்றிருக்குமோ என்ற சந்தேகத்தில் தேடினார். இதில் ஆத்திரமுற்ற சுப்பிரமணி, நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு, அவரது மகன்கள் கண்ணன், மலைச்சாமி, உறவினர்கள் சக்ரவர்த்தி, சிதம்பரம், பாப்பா, மகேஷ், ராஜேந்திரனுடன், பொன்னுமுத்து வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டனர். அவர்கள் தாக்கியதில், பொன்னுமுத்து, காளிமுத்து, உறவினர் செல்வகுமார் (28) காயமுற்றனர்.
இதை அறிந்த பொன்னுமுத்துவின் உறவினரான சித்திரைவேலு தலைமையில், செல்வகுமார், ராமு, முத்துராமலிங்கம், விஜயா, காளிமுத்து, சுரேஷ், பழனிவேலுடன் சென்ற கும்பல், சுப்பிரமணியன், அவரது உறவினர் சிதம்பரத்தை (45) தாக்கி, வீடுகளை சூறையாடினர். காயமடைந்த 5 பேரும் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இருதரப்பு புகார்படி, மானாமதுரை போலீசார் சிதம்பரம், ராஜேந்திரன், காளிமுத்து, பழனிவேலை கைது செய்தனர்.
18 hour(s) ago
18 hour(s) ago
18 hour(s) ago
18 hour(s) ago
18 hour(s) ago