உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஆவினில் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கு சிக்கல் : தனியார் பால் விலை உயர்வால் "கிராக்கி

ஆவினில் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கு சிக்கல் : தனியார் பால் விலை உயர்வால் "கிராக்கி

காரைக்குடி : தனியார் பால் விலை உயர்வால், காரைக்குடி ஆவின் பாலுக்கு கிராக்கி அதிகரித்துள்ளது. புதிய சந்தாதாரர்களுக்கு பால் வழங்க ஆவின் நிர்வாகம் மறுத்துவருவதால், பாலுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. காரைக்குடி ஆவின் பாலகம் மூலம் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் 25,000 லிட்டர் பால் விற்கப்படுகிறது. தற்போது 38,000 லிட்டர் பால் உற்பத்தியாகிறது. தேவை போக எஞ்சிய பாலை மதுரைக்கு அனுப்புகின்றனர். பால் பூத்களில் ஒரு லிட்டர் 25 ரூபாய்க்கு விற்கிறது. ஆனால், சந்தாதாரர்களுக்கு லிட்டர் 22 ரூபாய் 50 பைசாவுக்கு தரப்படுகிறது. இங்கு, 11,000 பேர் சந்தாதாரர்களாக உள்ளனர். செப்., 1 முதல் தனியார் பால் பாக்கெட்கள் விலை உயர்ந்துவிட்டது. அதே நேரம் ஆவின் பால் லிட்டருக்கு 7 ரூபாய் வரை குறைவாக கிடைக்கிறது. இதனால், ஆவின் பாலுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. சந்தாதாரர்களாக சேர்ந்தால், இன்னும் குறைவான விலையில் பால் கிடைக்கும் என்பதால், பலர் உறுப்பினர்களாக பதிய செல்கின்றனர். ஆனால், பால் பூத்களில் புதிய சந்தாதாரர்களை சேர்க்க மறுக்கின்றனர். இது குறித்து ஆவின் அதிகாரி ஒருவர் கூறியதாவது: தனியார் பால் விலை உயர்வால், ஆவின் பாலை அதிகம் வாங்குகின்றனர். தனியாரை விட லிட்டருக்கு 9 ரூபாய் 50 பைசா குறைவு என்பதால், புதிய உறுப்பினர்களாக சேர வருகின்றனர். ஏற்கனவே உள் சந்தாதாரர்களுக்கு பால் கொடுப்பதின் மூலம் லிட்டருக்கு 10 ரூபாய் வரை நஷ்டம் ஏற்படுகிறது. இதனால், புதிய சந்தாதாரர்களை தவிர்க்கிறோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை