உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வாரம்தோறும் குறை தீர் முகாம் அ.தி.மு.க., வேட்பாளர் உறுதி

வாரம்தோறும் குறை தீர் முகாம் அ.தி.மு.க., வேட்பாளர் உறுதி

சிவகங்கை : சிவகங்கை ஊராட்சி ஒன்றியம் ஓ.புதூர் சோழபுரம் ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு அ.தி.மு.க., சார்பில் கருங்காப்பட்டி எம்.மூக்காயி மாதவன் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவர் கூறியதாவது: அரசு நலத்திட்டங்கள் அனைவருக்கும் சென்றடைய உதவி புரிவேன். சோழபுரத்தில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி கொண்டு வர நடவடிக்கை எடுப்பேன். 8வது வார்டில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். உழவர் பயிற்சி மையத்தை விரிவாக்கம் செய்து அனைத்து மக்களுக்கும் பயன் கிடைக்கச் செய்வேன். மேலும் அடிப்படை வசதிகளாக சாலைமேம்பாடு, குடிநீர் வசதி,சுகாதாரவசதி மேற்கொள்ளப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை