உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / டாக்டர்கள் பற்றாக்குறை நோயாளிகள் திண்டாட்டம்

டாக்டர்கள் பற்றாக்குறை நோயாளிகள் திண்டாட்டம்

இளையான்குடி:இளையான்குடி தாலுகா அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் அவதிப்படுகின்றனர்.இளையான்குடி பஸ் ஸ்டாண்ட் அருகில் அரசு மருத்துவமனை உள்ளது. இளையான்குடியை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து தினமும் 500 க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இங்கு 11 டாக்டர்கள் பணியில் இருக்க வேண்டும், தற்போது இரண்டு குழந்தைகள் டாக்டர் , இரண்டு பொது மருத்துவம், ஒரு அறுவை சிகிச்சை, சித்தா என 6 டாக்டர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். மயக்க மருந்து டாக்டர் வாரத்தில் புதன் , வியாழன் என இரண்டு நாள் மட்டுமே வெளியே இருந்து வருகிறார். அறுவை சிகிச்சை டாக்டர்இருந்தும் நோயாளிகள் தொடர்ந்து சிகிச்சை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.எலும்பு முறிவு, கண், பல், இதயம் சம்பந்தப்பட்ட டாக்டர்கள் இல்லாததாலும், மேலும் பணியில் இருக்கும் டாக்டர்களும் அடிக்கடி விடுப்பில் சென்று விடுவதாலும் நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் அவதிப்படுகின்றனர்.இப்பகுதி மக்களின் நலன் கருதி காலியாக உள்ள டாக்டர் பணியிடங்களை நிரப்புவதற்கு மாவட்டநிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை