உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / புனித மைக்கேல் பொறியியல் கல்லூரியில் ஓணம் பண்டிகை

புனித மைக்கேல் பொறியியல் கல்லூரியில் ஓணம் பண்டிகை

காளையார்கோவில் : காளையார்கோவில் புனித மைக்கேல் பொறியியல் கல்லூரியில், கேரள மாணவ, மாணவிகள் ஓணம் பண்டிகையை கொண்டாடினர். கல்லூரி தலைவர் ஸ்டாலின் ஆரோக்கியராஜ் துவக்கி வைத்தார். கேரள மன்னர் மாவேலி வேடமனிந்து மாணவர்கள் ஊர்வலம் வந்தனர். கல்லூரி மாணவிகள் அத்தப்பூ கோலமிட்டனர். கல்லூரியில் மாணவிகளின் வரவேற்பு, திருவாதிரை நடனங்களை ஆடினர். ஓணம் பாடல் பாடப்பட்டது.மாணவர்களுக்கு உறியடித்தல் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடந்தது. முதன்மை செயல் அலுவலர் பிரிஜிட் நிர்மலா, முதல்வர் கோபிநாத், துணை முதல்வர் ராஜநாராயணன், ஒருங்கிணைப்பாளர் கண்ணன், பேராசிரியர் கற்பகம் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ