உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கையில் ஜூலை 4ல்  பேச்சு, கட்டுரை போட்டி 

சிவகங்கையில் ஜூலை 4ல்  பேச்சு, கட்டுரை போட்டி 

சிவகங்கை,: தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு ஜூலை 4 ம் தேதி சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கல்லுாரியில் கட்டுரை, பேச்சு போட்டி நடைபெறுகிறது.மாவட்ட அளவில் அனைத்து பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு, ஜூலை 4 ம் தேதி காலை 9:00 மணிக்கு போட்டி நடைபெறும். இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.10 ஆயிரம், 2 ம்பரிசு ரூ.7 ஆயிரம், 3 ம் பரிசு ரூ.5 ஆயிரம் பரிசு, பாராட்டு சான்று வழங்கப்படும். கட்டுரை போட்டி தலைப்பு ஆட்சிமொழி வரலாற்றில் கீ.ராமலிங்கம் மற்றும் பன்மொழி புலவர் கா.அப்பாதுரையின் தமிழ் ஆட்சி சொல் பணி என்ற தலைப்பிலும், பேச்சு போட்டிக்கு தலைப்பு 1 கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, 2 அன்னை தமிழே ஆட்சி மொழி, 3 தொன்று தொட்டு தமிழ்நாடு எனும் பெயர், 4. அண்ணா கண்ட தமிழ்நாடு, 5 ஆட்சிமொழி விளக்கம், 6. தமிழ்நாடு என பெயர் சூட்டிய நிகழ்வு, 7. ஆட்சி மொழி சங்ககாலம் தொட்டு, 8. இக்காலத்தில் ஆட்சி மொழி ஆகிய தலைப்பில் பேசலாம்.மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்று பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !