பள்ளிகளுக்கு இடையே விளையாட்டு போட்டி
காரைக்குடி: கோட்டையூர் முத்தையா அழகப்பா மெட்ரிக் பள்ளியில், பள்ளிகளுக்கு இடையேயான கிட்குவெஸ்ட் ஸ்போர்ட்ஸ் பெஸ்டிவல் நடந்தது. இதில், 10 பள்ளிகளைச் சேர்ந்த குழந்தைகள் கலந்து கொண்டனர். குழந்தைகளிடையே விளையாட்டு ஒற்றுமை, நட்பு, ஆரோக்கியமான போட்டி உணர்வு ஆகியவற்றை வளர்க்க உதவிய இப்போட்டியினை அழகப்பா பல்கலை யோகா கல்வி மைய ஒருங்கிணைப்பாளர் சரோஜா தொடங்கி வைத்தார். முதல் நாள் குழந்தைகள் நட்பை வளர்த்துக் கொள்ளவதற்கான நட்புக்கான போட்டி நடந்தது. பாடல் மற்றும் செயல் நிகழ்ச்சி குழந்தைகளின் ஒத்துழைப்புத் திறன் மற்றும் கவனத்திறனை மேம்படுத்தியது. இரண்டாவது நாள் நடந்த நிகழ்ச்சியில் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.