உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  துாசியால் மாணவர்கள் பாதிப்பு

 துாசியால் மாணவர்கள் பாதிப்பு

சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் கயிறு மூலப்பொருள் தொழிற்சாலையில் இருந்து வெளிவரும் துாசியால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இப்பேரூராட்சியில் சஞ்சீவி மலை ரோட்டில் தனியாருக்கு சொந்தமான கயிறு திரிக்க தேவையான மூலப்பொருள் தயாரிக்கும் தொழில் கூடம் உள்ளது. ரோட்டோரத்தில் முறையான தடுப்பு இல்லாமல் மூலப் பொருட்கள் தயாரிப்பதால் அப்பகுதியில் துாசி பறக்கிறது. இச்சாலை வழியாகத்தான் ஒன்றிய அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம், அரசு துவக்கப்பள்ளி, தனியார் பள்ளிகளுக்கு செல்ல வேண்டும். அவ்வழியாக செல்லும்போது துாசியால் பொதுமக்களும், மாணவர்களும் பாதிக்கப்படுகின்றனர். முறையான தடுப்பு அமைத்து கயிறு மூலப்பொருட்களை தயாரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை