உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சாலையை கடக்கும் மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லை; காலை, மாலையில் போலீசார் உதவுவார்களா

சாலையை கடக்கும் மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லை; காலை, மாலையில் போலீசார் உதவுவார்களா

திருப்புவனம், லாடனேந்தல், திருப்பாச்சேத்தி, மணலுார், வெள்ளக்கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ரோட்டை ஒட்டி அரசு மற்றும் தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. திருப்புவனம் அரசு ஆண்கள், பெண்கள் பள்ளிகளில் மட்டும் மூவாயிரம்மாணவ, மாணவியர் பயில்கின்றனர். தினசரி பள்ளிகளுக்கு சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து நடந்தும், சைக்கிள்களிலும் மாணவ, மாணவியர் வந்து செல்கின்றனர். இவர்கள் சாலையை கடக்க நீண்ட நேரம் காத்து கிடக்க வேண்டியுள்ளது. அதிலும் திருப்புவனம், லாடனேந்தல், திருப்பாச்சேத்தி உள்ளிட்ட இடங்களில் உள்ள ரோட்டை ஒட்டிய பள்ளிகளில் சாலையை கடக்க முடியாமல் மாணவ, மாணவியர் காத்து கிடக்கின்றனர். தனியார் பள்ளிகளில் ஆசிரியர்கள், ஊழியர்கள் காலை, மாலை நேரங்களில் வாசலில் நின்று மாணவ, மாணவியர் சாலையை பாதுகாப்பாக கடக்க உதவி செய்கின்றனர். ஆனால் அரசு பள்ளிகளில் யாரும் உதவி செய்வது கிடையாது. திருப்புவனம் அரசு பெண்கள் பள்ளி அருகில்மட்டும் போலீசார் தினசரி காலை, மாலை நேரங்களில் சாலையை கடக்க உதவுகின்றனர். மற்ற இடங்களில் யாருமே இருப்பதில்லை. சாலையை கடக்க முயன்று வாகனங்களில் அடிபட்டு மாணவ, மாணவியர் பலரும் விபத்தில் சிக்கி காயமடைந்து வருகின்றனர். அனைத்து பள்ளிகளுக்கும்போலீசார் நியமிப்பது எளிதல்ல.எனவே மாவட்ட நிர்வாகம் ரோட்டை ஒட்டிய பள்ளிகளில் அங்கு பணியாற்றும் ஆசிரியர்கள் சுழற்சி முறையில் மாணவ, மாணவியர் சாலையை பாதுகாப்பாக கடக்க உதவி செய்ய அறிவுறுத்த வேண்டும் என பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி