உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அம்மா உணவகத்தில் தரமற்ற உணவு: பொதுமக்கள் வாக்குவாதம்

அம்மா உணவகத்தில் தரமற்ற உணவு: பொதுமக்கள் வாக்குவாதம்

காரைக்குடி: காரைக்குடி அம்மா உணவகத்தில் வழங்கப்படும் தரமற்ற உணவால் பொதுமக்களுக்கும், பணியாளர்களுக்கும் இடையே தகராறு ஏற்படுகிறது.காரைக்குடி சுப்பிரமணியபுரத்தில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. அரசு அலுவலகங்கள் பல அருகில் உள்ளதால், அரசு அலுவலகங்களுக்கு வருவோரும், கூலித் தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பினரும் அம்மா உணவகத்தை பயன்படுத்தி வருகின்றனர். காலையில் இட்லி சாம்பார் அல்லது பொங்கல், மதியம் தயிர்சாதம் மற்றும் சாம்பார் அல்லது புளி சாதம் வழங்கப்படுகிறது. தினமும் 900 க்கும் மேற்பட்டோர் உணவருந்தி வருகின்றனர்.இந்த அம்மா உணவகத்தில் வழங்கப்படும் உணவு தரமற்று இருப்பதாக புகார் எழுந்தது. நேற்று வழங்கப்பட்ட புளி சாதம் சரியாக வேகாமல் அரிசியாக இருந்ததாக சாப்பிட வந்தவர்கள் புகார் எழுப்பினர். இதனால் பணியாளர்களுக்கும் சாப்பிட வந்தவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாங்கிய பலர் சாப்பிட முடியாமல் வெளியே கொட்டி சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை