உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  திருப்புவனத்தில் 3 வார்டுகளில் கண்காணிப்பு கேமரா

 திருப்புவனத்தில் 3 வார்டுகளில் கண்காணிப்பு கேமரா

திருப்புவனம்: திருப்புவனத்தில் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்ட சி.சி.டி.வி.,கேமராக்கள் நேற்று பொதுப் பயன்பாட்டிற்கு துவக்கி வைக்கப்பட்டது. திருப்புவனத்தில் 4,5 மற்றும் 15வது வார்டு கவுன்சிலர்களாக த.மா.கா.,வைச் சேர்ந்த எம்.பாரத்ராஜா, வெங்கடேஸ்வரி சூரசிங்காரம், எம்.அயோத்தி உள்ளனர். இந்த மூன்று வார்டு களிலும், பஸ் நிறுத்தம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஐந்து லட்ச ரூபாய் செலவில் 50 கண் காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டன. இக்கேமராக்களின் கட்டுப்பாட்டு மையம் திருப்புவனம் காவல் நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இதை மானாமதுரை டி.எஸ்.பி., பார்த்திபன் திறந்து வைத்தார். இன்ஸ்பெக்டர் முத்துகுமார், எஸ்.ஐ., பாரதிராஜா மற்றும் கவுன்சிலர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதற்கான செலவை த.மா.கா., மாநில தொண்டரணி தலைவரும், கவுன்சிலருமான அயோத்தி ஏற்றுக்கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்