உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கோயில் கும்பாபிஷேகம் கமிஷன் ஆய்வு

கோயில் கும்பாபிஷேகம் கமிஷன் ஆய்வு

தேவகோட்டை,- தேவகோட்டை இறகுசேரியில் உள்ள மும்முடிநாதர் கோயில் கும்பாபிஷேகம் வரும் 24ந்தேதி தமிழ் முறைப்படி நடப்பதாக அறிவிக்கப்பட்டது.இக்கிராமத்தைச் முருகன், இக்கோயில் இறகுசேரி நாட்டில் உள்ளது. எனவே கும்பாபிஷேக அழைப்பில் இறகுசேரி என்ற பெயரை சேர்க்க வேண்டும், சனிக்கிழமை கும்பாபிஷேகம் நடத்தக் கூடாது, சிவாச்சாரியார்கள் கொண்டு நடத்தவும் வேண்டியும் மேலும் பணிகள் இன்னும் முடியவில்லை என்று மதுரை ஐகோர்ட்டில் மனு செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி புகழேந்தி கோயில் பணிகள் பற்றியும், கோயிலை ஆய்வு செய்து அறிக்கை தருமாறு வக்கீல் சுப்புராஜ் தலைமையில் கமிஷன் அமைத்து உத்தரவிட்டார்நேற்று மாலை மதுரை வக்கீல் சுப்புராஜ் இறகுசேரியில் கோயிலை ஆய்வு செய்து அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை