திருப்புத்துாரில் பஸ் ஸ்டாப்பில் கிடந்த தாலி செயின், பணம்
திருப்புத்துார் : திருப்புத்துார் அருகே பஸ் ஸ்டாப்பில் கிடந்த தாலி செயின், பணத்தை ஸ்டேஷனில் ஒப்படைத்த வாலிபரை போலீசார் பாராட்டினர். திருப்புத்தூர் கான்பா நகரைச் சேர்ந்தவர் சிக்கந்தர் பாதுஷா 31. ஏரோநாட்டிக்கல் இன்ஜி படித்து பொறியாளர் பட்டதாரியான இவர் டிராவல்ஸ் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் மாலை தனது தாயாருக்கு மருந்து வாங்க நாச்சி யார்புரம் வழியாக காரைக்குடிக்கு டூவீலரில் சென்றார். அப்போது கொரட்டி பஸ் நிறுத்தத்தில் ஆட்கள் யாரும் இல்லாத போது ஒரு சிறிய பேக் இருப்பதைப் பார்த்தார். தாலிச்செயின், ரூ.3,600 இருந்தது. இந்த நகை, பணத்தை திருப்புத்துார் இன்ஸ்பெக்டர் பிராவின் டேனியிடம் ஒப் படைத்தார். போலீசார் விசாரணையில் இந்த நகை காரைக்குடி செஞ்சை ஊரணியை சேர்ந்த அபிராமிக்கு சொந்தமானது என தெரிந்து, அவரிடம் ஒப் படைத்தனர்.