உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / நெருங்கி வரும் பொங்கல் பண்டிகை மானாமதுரையில் பானை விற்பனை ஜரூர்

நெருங்கி வரும் பொங்கல் பண்டிகை மானாமதுரையில் பானை விற்பனை ஜரூர்

மானாமதுரை ; பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதை தொடர்ந்து மானாமதுரையிலிருந்து பொங்கல் பானைகள் வெளியூர்களுக்கு வாகனங்களில் விற்பனைக்காக அனுப்பும் பணி துவங்கியது.மானாமதுரையில் 300க்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் வருடம் தோறும் சீசனுக்கு தகுந்தாற்போல் மண்பாண்ட பொருட்களை தயார் செய்து தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு இடங்களுக்கு அனுப்பி வருகின்றனர். வருகிற ஜன.15ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு மண் பானைகளில் பொங்கல் வைப்பதற்காக மானாமதுரையில் கடந்த சில மாதங்களாக பானைகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வந்தது.பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதை தொடர்ந்து தயாரான பொங்கல் பானைகளை வெளியூர்களுக்கு வாகனங்களில் அனுப்பி வைக்கும் பணிகளில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.மண்பாண்ட தொழிலாளர்கள் கூறுகையில், மானாமதுரையில் தயாரிக்கப்படும் பொங்கல் பானைகள் மிகவும் கலைநயமாகவும், உயர்ந்த தரத்துடனும் இருப்பதால் அனைத்து பகுதிகளிலும் உள்ள வியாபாரிகள் இங்கு வந்து வாங்கி செல்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை